மணிப்பூரில் ரூ.643 கோடியில் இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் - மத்திய மந்திரி அனுராக் தாக்குர் தகவல்
மணிப்பூரில் அதிநவீன விளையாட்டுப் பல்கலைக்கழகம் கட்டப்படும் என்று அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
வடகிழக்கு பிராந்தியத்தின் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் பதிலளித்துள்ளார். அதில் இந்தியாவின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் சுமார் 643 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன விளையாட்டுப் பல்கலைக்கழகம் கட்டப்படும் என்றும், வடகிழக்கு பிராந்தியத்தில் விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்த 75 திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்கனவே 227 கேலோ இந்தியா மையங்கள் அமைக்கப்பட்டு விளையாட்டுத் திறமைகளை அதிகரிப்பதற்கான சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story