2030-ல் உலகளாவிய பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மனித வளம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு


2030-ல் உலகளாவிய பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மனித வளம் முக்கியத்துவம் பெற்றிருக்கும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேச்சு
x

2030-ல் உலகளாவிய பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மனித வளம் முக்கியத்துவம் பெற்றிருக்கும் என மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.புதுடெல்லி,


இந்தியா, இன்றில் இருந்து ஓராண்டுக்கு ஜி-20 மாநாட்டுக்கான தலைமையை ஏற்கிறது. இந்தியா பெற்ற தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் பற்றி பிரதமர் மோடி உரையாற்றினார்.

இந்த நிகழ்வை முன்னிட்டு புதுடெல்லியில் ஜி-20 பல்கலைக்கழக இணைப்பு - இளம் மனங்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் இளைஞர்களுக்கு ஆர்வம் ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி இன்று நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு இளைஞர்களின் முன் பேசினார். அவர் பேசும்போது, இந்த தசாப்தத்தின் இறுதியில், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நாம் இருப்போம். உலக அளவில் ஏறக்குறைய 3-வது பெரிய பொருளாதார நாடாகவும் நாம் நிச்சயம் இருப்போம்.

செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்த கூடிய உலகில், 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய பொருளாதாரத்திற்கு இந்தியாவின் மனித வளம் அதிமுக்கியத்துவம் பெற்றிருக்கும். நேரம் நமது பக்கம் உள்ளது.

கடந்து போகும் ஒவ்வொரு நாளிலும், இந்தியாவின் மதிப்பை உலகம் பார்த்து கொண்டிருக்கிறது. இது 45 ஆண்டுகளுக்கு முன் இல்லாத நிலை என்று அவர் கூறியுள்ளார். பிறருடன் இணக்கம் அதிகரிப்பதற்கான எடுத்துக்காட்டாக இந்தியா விளங்குகிறது என்று மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியுள்ளார்.


Next Story