இந்தியாவில் 2022-23ல் மின்சார தேவை 10% அதிகரிக்கும் - ஆய்வு நிறுவனம் கணிப்பு


இந்தியாவில் 2022-23ல் மின்சார தேவை 10% அதிகரிக்கும் - ஆய்வு நிறுவனம் கணிப்பு
x

2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரை மின்சார தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக ‘க்ரிசில்’ ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் 2022-23ல் மின்சார தேவை 10% அதிகரிக்கும் என்று 'க்ரிசில்'(CRISIL) ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது. 2021-22ல் இந்தியாவின் மின்சார தேவை அதற்கு முந்தைய ஆண்டை விட 8.2% அதிகரித்தது. 2023 பிப்ரவரியில் மின்சார தேவை 7.7% ஆக அதிகரித்துள்ளது.

2022 ஏப்ரல் முதல் 2023 பிப்ரவரி வரையிலான 11 மாதங்களில் மின்சார தேவை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக 'க்ரிசில்' ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. மொத்த மின் உற்பத்தில் நீர்மின் நிலையங்கள் தவிர்த்து இதர வகை புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் துறையின் பங்கு 11 சதவீதமாக தற்போது உள்ளது.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் மூலம் இயக்கப்படும் அனல்மின் நிலையங்கள் 21 சதவீத கொள்ளளவில் இயங்குகின்றன. இதன் காரணமாக மின்சார சந்தையில் குறுகிய கால தேவைகளுக்கான மின்சார விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.




Next Story