நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!


நாட்டின் சில்லறை பணவீக்கம் 7.44 சதவீதமாக உயர்வு - ரிசர்வ் வங்கியின் உச்சவரம்பை தாண்டியது...!
x

நாட்டின் சில்லறை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டு வரம்பை தாண்டி கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

டெல்லி,

ஜூலை மாதத்திற்கான நாட்டின் சில்லறை வர்த்தக பணவீக்கம் 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 4.87 சதவீதமாக இருந்த சில்லறை வர்த்தக பணவீக்கம் ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது. இது கடந்த 14 மாதங்களில் இல்லாத பணவீக்க உயர்வாகும்.

சில்லறை வர்த்தக பணவீக்கம் 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி 7.44 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட உச்ச வரம்பான 6 சதவீதத்தை விட அதிகமாகும்.

ஜூலை மாதத்தில் உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் 11.51 சதவீதமாகஅதிகரித்துள்ளது. ஜூன் மாதம் 4.55 சதவீதமாக இருந்த உணவுப்பொருட்கள் மீதான பண வீக்கம் தற்போது 11.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. காய், கனிகள் மற்றும் உணவு பொருட்களின் விலை உயர்வு பண வீக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.


Next Story