இந்திரா உணவகங்களில் உணவுகள் விலை உயர்த்தப்படாது; மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தகவல்


இந்திரா உணவகங்களில் உணவுகள் விலை உயர்த்தப்படாது; மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தகவல்
x

இந்திரா உணவகங்களில் உணவுகள் விலை உயர்த்தப்படாது என்று பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் தெரிவித்தார்.

பெங்களூரு:

பெங்களூருவில் ஒருசில வார்டுகளை தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் இந்திரா உணவகங்கள் உள்ளன. கடந்த பா.ஜனதா ஆட்சியில் ஏராளமான இந்திரா உணவகங்கள் மூடப்பட்டது. தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளதால் இந்திரா உணவகங்கள் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. மேலும் இந்திரா உணவகங்களில் புதிய உணவு வகைகள் சேர்க்ககப்படும் என்றும், உணவுகளின் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்திரா உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்படாது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் திரிலோக்சந்திரா நிருபர்களிடம் கூறுகையில், 'பெங்களூருவில் அரசின் உத்தரவின் பேரில் இந்திரா உணவகங்களின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசும் கூடுதல் நிதி ஒதுக்குவதாக அறிவித்துள்ளது. அரசு நிதி ஒதுக்கியதும் கூடுதல் உணவகங்கள் திறக்கும் பணிகள் தொடங்கும். அரசு ஆஸ்பத்திரிகளில் கூட இந்திரா உணவகங்கள் இருக்கின்றன. இது ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட உணவகங்கள். அதனால் இந்திரா உணவகங்களில் உணவுகளின் விலை உயர்த்தப்படாது', என்றார்.


Next Story