தொழில்துறை தலைமையிலான கூட்டணி, சுழற்சிப் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும் - மத்திய மந்திரி
தொழில்துறை தலைமையிலான கூட்டணி, ஆதார வளப்பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கு அடித்தளமாக அமையும் என மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை தொடர்பான 4-வது கூட்டம், சென்னை, கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில், ஆதாரவள பயன்பாடு மற்றும் சுழற்சிப் பொருளாதாரத்திற்கான தொழில்துறை தலைமையிலான கூட்டணியை மந்திரி பூபேந்தர் யாதவ் தொடங்கி வைத்தார்.
இதில், ஐரோப்பிய யூனியன், கனடா, டென்மார்க், இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட ஜி-20 நாடுகளின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய மந்திரி பூபேந்தர் யாதவ், நீடித்த சுற்றுச்சூழல் தன்மையில் நிலையான தாக்கத்தை உருவாக்க இந்தியாவின் ஜி-20 நாடுகளின் தலைமைத்துவத்துக்கு பிறகும் தொடரும் வகையில், இந்தக் கூட்டணி, தற்சார்பு கொண்டதாக இருக்கும் என்று கூறினார்.
Related Tags :
Next Story