பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமா? நிதி ஆயோக் விளக்கம்
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்குவது குறித்து பரவிய தகவல் போலியானது என நிதி ஆயோக் விளக்கமளித்துள்ளது.
புதுடெல்லி,
பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் பட்டியல் ஒன்றை வெளியிட்டிருப்பதாக பரவி வரும் தகவல் போலியானது என நிதி ஆயோக் கூறியுள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
"பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் தகவல் வெளியிட்டிருப்பதாக ஒரு போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இதுபோன்ற எந்த ஒரு பட்டியலையும் நிதி ஆயோக் எந்த வடிவத்திலும் வெளியிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது."
இவ்வாறு நிதி ஆயோக் கூறியுள்ளது.
Related Tags :
Next Story