ஐ.என்.எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து: மாலுமி மாயம்


ஐ.என்.எஸ் பிரம்மபுத்திரா கப்பலில் தீ விபத்து:  மாலுமி மாயம்
x

இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். போர் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மும்பை,

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., ரக பிரம்மபுத்திரா போர்க்கப்பல் இன்று மும்பையில் உள்ள கப்பற்படை தளத்தில் மறு சீரமைப்பு மற்றும் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்து. அப்போது, கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதனால் கப்பல் முழுதும் தீக்கிரையாகி அதன் ஒரு பகுதி கடலில் மூழ்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கப்பலில் இருந்த ஒரு மாலுமி மாயமாகி இருப்பதாகவும் முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. தற்போது கப்பலில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.


Next Story