இன்ஸ்டா பிரபலம் மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை


இன்ஸ்டா பிரபலம் மொட்டைமாடியில் தூக்கிட்டு தற்கொலை
x

சத்தீஸ்கரை சேர்ந்த இன்ஸ்டா பிரபலமான இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை

சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் உள்ள கெலோ விகார் காலனியில் வசித்து வருபவர் லீனா நாக்வன்ஷி (22). இவர், ஒரு இன்ஸ்டா பிரபலம் ஆவார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் பெரிய அளவில் பார்வையாளர்களை கவரவில்லை என்றாலும், இன்ஸ்டாவில் 10 ஆயிரம் பின்தொடர்புபவர்களை கொண்டுள்ளார்.

பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வரும் இவர், அவ்வப்போது செய்திகளிலும் வருவார். இவருக்கு ஒரு ஆண் நண்பர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் இன்று தனது வீட்டிலுள்ள மாடியில் உள்ள தனது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.

இது குறித்துபோலீஸ் அதிகாரி தினேஷ் கூறுகையில், "இன்று மதியம் சுமார் ஒரு மணியளவில் கெலோ விஹார் காலனியில் வசிக்கும் 22 வயதான லீனா என்பவர் வீட்டின் மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

சம்பவ இடத்திலிருந்து தற்கொலைக் குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவரது மொபைல் போனை மட்டும் கைப்பற்றியுள்ளோம். தனிப்பட்ட காரணங்களால் லீனா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான உறுதியான காரணம் எதுவும் இதுவரை தெரியவரவில்லை" என்றார்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு மும்பையை சேர்ந்த இளம் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா ஷூட்டிங்கின்போது தனது ஓய்வறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது முன்னாள் காதலன் ஷசீன் முகமது கான் என்பவர் கைது செய்யப்பட்டார்.


Next Story