கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா


கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா
x

கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம் என்று மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ஜி20 சுகாதாரப் பணிக் குழுவின் இரண்டாம் அமர்வில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டு பேசியதாவது:-

கொரோனா தொற்று குறித்த பீதி பரவக் கூடாது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பீதி பரவாமல் தடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். அதேநேரத்தில், கொரோனா தொற்றுக்கு எதிரான தயார் நிலைகளை மேற்கொள்வதில் சோர்வுக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது.

ஜி20 தலைமைப் பொறுப்பில் இதற்கு முன் இத்தாலியும், இந்தோனேஷியாவும் இருந்தபோது இருந்த கொரோனாவுக்கு எதிரான செயல்முறையின் வேகம் தற்போதும் தொடர இந்தியா திட்டமிட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் சர்வதேச ஒருங்கிணைப்பு மிகவும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டே இந்தியா டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் சுகாதாரத் துறையில் தொழில்நுட்பப் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றை ஊக்குவித்து வருகிறது.

தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு சுகாதாரத் துறையில் இருக்கும் இடைவெளியை நிரப்பவும், மக்கள் நலனுக்கான டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வளர்க்கவும் இந்தியா திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. உலக சுகாதாரத்தில் நம்பிக்கை அளிக்கக்கூடிய தாக்கத்தை ஏற்படுத்துவதில் ஜி20 சுகாதார பணிக் குழு முன்னிலை வகிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story