மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் 6 பேர் பயணிக்கும் வசதி அறிமுகம்


மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் 6 பேர் பயணிக்கும் வசதி அறிமுகம்
x
தினத்தந்தி 24 Nov 2022 6:45 PM GMT (Updated: 24 Nov 2022 6:45 PM GMT)

மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் 6 பேர் பயணிக்கும் வசதி அறிமுகம் செய்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் பொதுமக்கள் வசதிக்காக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 1-ந் தேதி முதல் 'கியூ.ஆர்.' கோடு மூலம் டிக்கெட் பெற்று மெட்ரோ ரெயில்களில் பயணிக்கும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்தது. இந்த நிலையில் மெட்ரோ ரெயில்களில் இனி ஒரே டிக்கெட்டில் 6 பேர் வரை பயணம் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. இதுவரை ஒரே குடும்பத்தினர் என்றாலும் அவர்கள் தனித்தனி டிக்கெட்டுகளை (டோக்கன்களை) பெற்று பயணம் செய்ய வேண்டி இருந்தது.

ஆனால் விரைவில் மெட்ரோ நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ள திட்டத்தில் ஒரு டிக்கெட்டை கொண்டு அதிகபட்சம் 6 பேர் வரை பயணிக்கலாம். இந்த முறை அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 15-ந் தேதி முதல் அமலுக்கு வரும் அதிகாரிகள் கூறுகின்றனர். தற்போது சோதனை முறையில் சில ரெயில் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


Next Story