எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நிதின் அகர்வால் நியமனம்


எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நிதின் அகர்வால் நியமனம்
x

கேரளா ‘கேடர்’ ஐ.பி.எஸ். அதிகாரியான நிதின் அகர்வால் பி.எஸ்.எப். டி.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

புதுடெல்லி,

எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) தலைமை இயக்குனராக (டி.ஜி.) இருந்து வந்த பங்கஜ்குமார் சிங், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி ஓய்வுபெற்றார். அதன் பிறகு பி.எஸ்.எப். நிர்வாகத்தை சி.ஆர்.பி.எப். டி.ஜி. சுஜோய் லால் தாவோசென் கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார். இதனால் பி.எஸ்.எப். தலைமை பொறுப்பு 5 மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்து வந்தது.

இந்த நிலையில் 1989-ம் ஆண்டு பிரிவு கேரளா 'கேடர்' ஐ.பி.எஸ். அதிகாரியான நிதின் அகர்வால் பி.எஸ்.எப். டி.ஜி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான உத்தரவை மத்திய மந்திரிசபையின் நியமனங்கள் குழு நேற்று இரவு வெளியிட்டது.


Next Story