வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு


வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் - சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு
x

புதுக்கோட்டை வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை சார்பில் விசாரணை செய்து வந்த நிலையில் வழக்கை சிபிசிஐடி-யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கட்டங்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில். வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. சிபிஐ/ ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றக்கோரியும் சம்பவத்தை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story