இந்திய ஒற்றுமை யாத்திரை ஓராண்டு நிறைவு.. ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதி


இந்திய ஒற்றுமை யாத்திரை ஓராண்டு நிறைவு.. ராகுல் காந்தி கொடுத்த வாக்குறுதி
x
தினத்தந்தி 7 Sep 2023 7:24 AM GMT (Updated: 7 Sep 2023 7:24 AM GMT)

இது மக்கள் இயக்கம் என்றும் வரலாற்றில் ஈடு இணையற்றது என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார். இந்த யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரை நடத்த உள்ளனர்.

இந்திய ஒற்றுமை யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில், ஒரு வீடியோ வெளியிட்டு தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில், 'இந்திய ஒற்றுமை யாத்திரையின் அன்பை நோக்கிய நடைபயணம் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளமாக மாறியுள்ளது. இந்த பயணம் தொடரும்.. வெறுப்பு மறையும் வரை, இந்தியா ஒன்று சேரும் வரை. இது என்னுடைய வாக்குறுதி' என ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடைபயணத்தை பாராட்டி பல்வேறு தலைவர்கள் பதிவிட்டுள்ளனர். 4,000 கிமீ யாத்திரையை பாராட்டி உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இது மக்கள் இயக்கம் என்றும் வரலாற்றில் ஈடு இணையற்றது என்றும் கூறியுள்ளார்.


Next Story