காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 26-ம் தேதி நடத்த முடிவு


காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 26-ம் தேதி நடத்த முடிவு
x

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 26-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துவரும் நிலையில் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 5,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் மேலும் ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வருகிற 26-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக முக்கிய பரிந்துரைகளை ஒழுங்காற்று குழு அளிக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு நீர் திறந்துவிடுகிறதா என்பதை காவிரி ஒழுங்காற்றுக் குழு கண்காணிக்கும், மேலும் காவிரி நீர் விவகாரம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை செய்யும்.


Next Story