ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தது 'அரசியல் பிழை'


ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தது அரசியல் பிழை
x

ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்தது ‘அரசியல் பிழை’ என்று சபாநாயகர் காகேரி கடும் விமர்சனம் செய்துள்ளார்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சபாநாயகர் விஸ்வேசுவர ஹெக்டே காகேரி உத்தரகன்னடா மாவட்டம் சிர்சியில் போட்டியிடுகிறார். நேற்று அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசில் சேர்ந்து 'அரசியல் பிழை' செய்துவிட்டார். அவர் சுயேச்சையாக போட்டியிட்டு இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் கூட அவர் வெற்றிபெற வாய்ப்பு இருந்திருக்கும். அவர் காங்கிரசில் சேர்ந்தது அக்கட்சிக்கும், அவருக்கும் எதிர்மறையாக மாறிவிட்டது. எனக்குள்ள நெருங்கிய நண்பர்களில் ஜெகதீஷ் ஷெட்டரும் ஒருவர். அவர் என்னிடம் வந்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தபோது 2 மணி நேரம் அவருடன் பேசி சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் எனது முயற்சி வீணாய் போனது. அன்றைய தினம் நான் மிகவும் ஏமாற்றம் அடைந்தவனாக உணர்ந்்தேன். காங்கிரசில் சேர்ந்து தனக்கான நற்பெயர் உள்பட அனைத்தையும் கெடுத்துக் கொண்டார். இந்துத்துவா என்பது எனது நம்பிக்கை. அதை பின்தொடர்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங்தள அமைப்புக்கு தடை செய்வதாக அறிவித்து இருக்கிறது. காங்கிரசின் இந்த நடவடிக்கை இந்து மதத்தில் உள்ள பல பிரிவினரை காயப்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story