முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்ட ஜெகன் மோகன் ரெட்டி


முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் தன்னை ஒப்பிட்ட ஜெகன் மோகன் ரெட்டி
x

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆருடன் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தன்னை ஒப்பிட்டார்.

ஸ்ரீகாகுளம்,

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் நர்சன்னபேட் பகுதியில் நேற்று நடந்த நலத்திட்ட விழாவில் பேசினார். அப்போது தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி என்.டி.ஆர் ஆகியோருடன் தன்னை ஒப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஒருவர் சொந்தமாக கட்சி தொடங்கி, சொந்த உழைப்பில் ஆட்சிக்கு வந்தால், அவர் எம்.ஜி.ஆர். அல்லது என்.டி.ஆர். அல்லது ஜெகன் என அழைக்கப்படுவார். அதேநேரம் நீங்கள் ஒரு அரசியல் கட்சியை அபகரித்து, உங்கள் மாமனாரிடம் இருந்து முதல்-மந்திரி நாற்காலியையும் பறித்துக்கொண்டால்... அப்படிப்பட்டவர் சந்திரபாபு என அழைக்கப்படுவார்' என தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். மற்றும் என்.டி.ஆர். இருவரும் திரையுலக ஆளுமைகளாக இருந்து முறையே அ.தி.மு.க., தெலுங்குதேசம் என கட்சிகளை தொடங்கி முதல் முயற்சியிலேயே ஆட்சிக்கு வந்ததாக தெரிவித்த ஜெகன்மோகன் ரெட்டி, ஆனால் சந்திரபாபு நாயுடு தனது 2-வது முயற்சியில்தான் முதல்-மந்திரியாக முடிந்தது என்றும் சாடினார்.

மாமனாரின் முதுகில் குத்திவிட்டு, தேர்தலில் பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த ஒருவரை எப்படி அழைப்பது? என கேள்வியும் எழுப்பினார்.


Next Story