ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா கொலை வழக்கு ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.யிடம் சி.பி.ஐ. விசாரணை
முதலில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் தம்பி ஒய்.எஸ்.விவேகானந்தா ரெட்டி, கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம், அவருடைய வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர், தற்போதைய முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஆவார். முதலில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்த இவ்வழக்கு, பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக விவேகானந்தா ரெட்டியின் உறவினரும், கடப்பா தொகுதி ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் எம்.பி.யுமான ஒய்.எஸ்.அவினாஷ் ரெட்டியிடம் கடந்த ஜனவரி மாதம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்தநிலையில், மீண்டும் அவருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதை ஏற்று ஐதராபாத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு அவினாஷ் ரெட்டி ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story