ஜம்மு காஷ்மீர்: பிரஷர் குக்கரில் வெடிகுண்டு.. காவல்துறையின் முயற்சியால் பெரும் சதி முறியடிப்பு


ஜம்மு காஷ்மீர்: பிரஷர் குக்கரில் வெடிகுண்டு.. காவல்துறையின் முயற்சியால் பெரும் சதி முறியடிப்பு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 26 Nov 2022 7:28 AM IST (Updated: 26 Nov 2022 7:31 AM IST)
t-max-icont-min-icon

பிரஷர் குக்கரில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதை ஜம்மு காஷ்மீர் போலீசார் கண்டுபிடித்தனர்.

ஷோபியான்,

ஜம்மு காஷ்மீரில் ஷோபியான் காவல்துறை மற்றும் ராணுவத்தின் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில், ஷோபியானில் உள்ள இமாம்சாஹிப்பில் குக்கரில் வைக்கப்பட்டிருந்த மேம்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

குக்கரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை காவல்துறை மற்றும் 44 ராஷ்டிரிய ரைபிள்ஸ் படையினர் துரிதமுடன் செயல்பட்டு செயலிழக்க செய்ததால், பெரும் சதி முறியடிக்கப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரம்பன் மாவட்டத்தில் உள்ள நஷ்ரி நாகா அருகே, ஒரு மினி பஸ்ஸை இடைமறித்து சோதனை செய்ததில், அதில் ஒரு மேம்படுத்தப்பட்ட வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

"டிரக் மற்றும் டாக்சி ஓட்டுநர்கள் ஒட்டும் வகையிலான குண்டுகளின் ஆபத்து குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


Next Story