ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்ம மரணம்: போலீசார் விசாரணை
ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்மமான முறையில் வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரின் ஜம்மு நகரில் உதய்வாலா என்ற பகுதியில் வசித்து வந்தவர் ஹேமந்த் குமார் லோஹியா (57). சிறைத்துறை டி.ஜி.பி. லோஹியா, 1992ம் ஆண்டு ஐ.பி.எஸ். கேடர் ஆவார்.
இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்று பொறுப்பேற்றார். இந்நிலையில், லோஹியா நேற்று வீட்டில் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரித்தனர். இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், குடும்ப பிரச்னை காரணமாகவோ அல்லது முன்விரோதம் காரணமாகவோ இந்த கொலை நடந்திருக்கலாம் என்றனர்
உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ள போலீசார் கொலை சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story