ஜனார்த்தன ரெட்டி உள்பட 5 பேர் மீது வழக்கு


ஜனார்த்தன ரெட்டி உள்பட 5 பேர் மீது வழக்கு
x

ஜனார்த்தன ரெட்டி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

கொப்பல்:

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஜனார்த்தன ரெட்டி அக்கட்சியில் இருந்து விலகி கல்யாண ராஜ்ய பிரகதி என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அக்கட்சியை சேர்ந்த கொப்பல் மாவட்டம் கனககிரி தொகுதி வேட்பாளர் வெங்கடரமண தாசரி புகைப்படத்துடன் கூடிய பேனருடன் ஆம்புலன்ஸ் வாகனம் சுற்றி வந்தது. மேலும் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாகதேர்தல் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

அதையடுத்து அதிகாரிகள் அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமுதல் செய்தனர். முறையான அனுமதி பெறாமல் ஆம்புலன்ஸ் வாகனத்தை தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கனககிரி போலீசார், ஜனார்த்தன ரெட்டி, வேட்பாளர் வெங்கடரமண தாசரி, ஆம்புலன்ஸ் உரிமையாளர் நவீன்குமார், பல்லாரி நகர் தொகுதி வேட்பாளர் லட்சுமி அருணா, ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகிய 5 பேர் மீதும் தேர்தல் நடத்தை விதிமீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story