12 தொகுதிகளுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் மாற்றம்


12 தொகுதிகளுக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் மாற்றம்
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) கட்சி 12 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் மாற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பெங்களூரு:

எம்.பி.குமாரசாமி

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நியைில் ஜனதா தளம் (எஸ்) சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் 12 தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு, புதிய வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இருந்து வந்த எம்.பி.குமாரசாமிக்கு மூடிகெரே தொகுதியிலும், காங்கிரசில் இருந்து வந்த அனில் லாட்டுக்கு பல்லாரி நகர் தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றப்பட் வேட்பாளர்கள் (அடைப்புக்குறிக்குள் பழைய வேட்பாளர்கள் பெயர்)

விவரம் பின்வருமாறு:-

1. பசவனபாகேவாடி - சோமனகவுடா பட்டீல் (பரமானந்த தனிகேதார்)

2. பசவ கல்யாண் - சஞ்சய் வாடேகர் (சையத் யஷரத் அலி காத்ரி)

3. பீதர் - சூரியகாந்த் நாகரமாரபள்ளி (ரமேஷ் பட்டீல் சோலாப்புரா)

4. குஸ்டகி - சரணப்பா கும்பார் (துகாராம் சுர்வே)

5. ஹகரிபொம்மனஹள்ளி - நேமிராஜ் நாயக் (பரமேஸ்வரப்பா)

ராஜாஜிநகர்-அஞ்சனப்பா

6. பல்லாரி நகர் - அனில் லாட் (அல்லாபாஷா முன்னா)

7. சன்னகிரி - தேஜஸ்வி பட்டீல் (யோகேஷ்)

8. மூடிகெரே - எம்.பி.குமாரசாமி (பி.பி.நிங்கய்யா)

9. ராஜாஜிநகர் - அஞ்சனப்பா (கங்காதர் மூர்த்தி)

10. பெங்களூரு தெற்கு - ராஜகோபால்ரெட்டி (பிரபாகர் ரெட்டி)

11. மண்டியா - பி.ஆர்.ராமச்சந்திரா (எம்.சீனிவாஸ்)

12. வருணா - பாரதி சங்கர் (அபிஷேக்)


Next Story