இன்னும் ஓரிரு நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்


இன்னும் ஓரிரு நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்
x

இன்னும் ஓரிரு நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குமாரசாமி கூறினார்.

கோலார் தங்கவயல்:

இன்னும் ஓரிரு நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் குமாரசாமி கூறினார்.

பொதுக்கூட்டம்

கோலார் மாவட்டம் முதல்பாகல் தாலுகா கே.பையப்பள்ளி சாலையில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஜனதா தளம்(எஸ்) தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

வறட்சி மாவட்டமான கோலாரில் மக்கள் குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். நான் முதல்-மந்திரியாக இருந்த போது கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு ஆகிய மாவட்டங்களுக்கு எத்தினஹொலே குடிநீர் திட்டத்தை அமல்படுத்த ரூ.ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினேன். அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை.

குறிக்கோள்

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினரின் மெத்தனப்போக்கால் கோலார் மாவட்ட மக்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறார்கள். தற்போது ஆட்சியில் உள்ள பா.ஜனதா அரசு எத்தினஹொலே குடிநீர் திட்டத்திற்காக ரூ.700 கோடியை ஒதுக்கியது. அப்படியிருந்தும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. மேற்கண்ட குடிநீர் திட்டத்திற்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அரசு ஒதுக்கீடு செய்த ரூ.1,700 கோடி என்ன ஆனது.

இந்த நிதியில் பெருவாரியான தொகையை இரு கட்சிகளும் பங்கு போட்டு கமிஷன் பெற்றுள்ளனர். எனவே தான் இந்த குடிநீர் திட்டம் பல ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. வரும் சட்டசபை தேர்தல் மூலம் கர்நாடகாவில் ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆட்சி அமைத்தால் கோலார் மாவட்டத்திற்கு எத்தினஹொலே குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதே எனது குறிக்கோள் ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்னும் ஓரிரு நாளில்...

பின்னர் நிருபர்களுக்கு குமாரசாமி பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இன்னும் ஓரிரு நாட்களில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட கட்சி முடிவு செய்துள்ளது. அதில் ஏற்கனவே அறிவித்துள்ள சில வேட்பாளர்களை நீக்கி விட்டு வேறு வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். கோலார் மாவட்டத்தை பொறுத்த வரை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் குறைந்தது 4 தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story