ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்..!


ஜார்க்கண்டில் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம்..!
x

ஜார்க்கண்டில் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ராஞ்சி,

ஜார்கண்ட் காங்கிரஸ் கட்சியின் ஒழுங்குமுறைக் குழு, கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அலோக் துபே, டாக்டர் ராஜேஷ் குப்தா, சாது சரண் கோப் மற்றும் லால் கிஷோர் நாத் ஷாதேவ் ஆகியோரின் பெயரை மாநில தலைமைக்கு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், ஜார்கண்ட் மாநில தலைமை நிர்வாகத்திற்கு எதிரான செயல்கள், கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக மாநில பொதுச் செயலாளர்கள் உட்பட முக்கிய தலைவர்கள் 4 பேர் 6 ஆண்டுகளுக்கு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் ஒழுங்குமுறைக் குழு இந்த இடைநீக்கம் தொடர்பாக , ஜார்கண்ட் முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் அலோக் துபே, ராஜேஷ் குப்தா, சாது சரண் கோப், அனில் ஓஜா, ராகேஷ் திவாரி, சுனில் குமார் சிங் மற்றும் லால் கிஷோர் நாத் ஷாதேவ் ஆகியோருக்கு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story