ஒருதலை காதல்; இளம்பெண் கழுத்தறுத்து கொலை - அதிர்ச்சி சம்பவம்


ஒருதலை காதல்; இளம்பெண் கழுத்தறுத்து கொலை - அதிர்ச்சி சம்பவம்
x
தினத்தந்தி 4 Sept 2022 12:45 AM IST (Updated: 4 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்துகொள்ள மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் ரயகடா மாவட்டம் ஒசபடா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ரசிக பிரதான். இவரும் அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ரீமா மஜ்ஹி என்ற இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

இதனிடையே, தன்னை காதலிக்கும்படி ரீமாவை வற்புறுத்தி வந்தார். மேலும், ரீமாவின் பெற்றோரிடம் சென்று திருமணம் செய்துவைக்கும்படி கோரியுள்ளார்.

ஆனால், பிரதானை காதலிக்க ரீமா மறுத்துவிட்டார். அதேபோல், பிரதானுக்கு ரீமாவின் பெற்ற்றோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஒசபடா என்ற கிராமத்தில் ரீமா நேற்று கட்டிட வேலைக்க் சென்றிருந்தார். அப்போது, அங்கு வந்த பிரதான் தன்னை காதலிக்கும்படியும், திருமணம் செய்துகொள்ளும்படியும் ரீமாவை வற்புத்தியுள்ளார்.

இதற்கு ரீமா எதிர்ப்பு தெரிவிக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரதான் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு ரீமாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் ரீமா சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.

தாக்குதலை தடுக்க வந்த சக கட்டிட தொழிலாளர்களையும் பிரதான் தாக்கியுள்ளார். பின்னர், தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பின்னர், அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ரீமா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மேலும், பிரதான் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story