காஷ்மீரில் தொடர் தாக்குதல்கள்: அமித்ஷா பதவி விலக சுப்பிரமணிய சாமி வலியுறுத்தல்


காஷ்மீரில் தொடர் தாக்குதல்கள்: அமித்ஷா பதவி விலக சுப்பிரமணிய சாமி வலியுறுத்தல்
x

காஷ்மீரில் தொடர் தாக்குதல்கள் தொடர்பாக அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி வலியுறுத்தி உள்ளார்.

புதுடெல்லி,

காஷ்மீரில் அப்பாவி பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி உள்ளன. இதைப்போல ஆளும் பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமியும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருக்கும் நிலையில், தினமும் அங்கு ஒரு இந்து சுட்டுக்கொல்லப்படுகிறார். இதன் மூலம் உள்துறை மந்திரி அமித்ஷாவை பதவி விலக கோரும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அவருக்கு இப்போதெல்லாம் கிரிக்கெட் மீது தேவையற்ற ஆர்வம் ஏற்பட்டிருப்பதால் உள்துறைக்கு பதிலாக விளையாட்டு அமைச்சகம் வழங்கலாம்' என்று குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story