மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்


ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயார் காலமானார்
x
தினத்தந்தி 15 May 2024 1:58 PM IST (Updated: 15 May 2024 2:23 PM IST)
t-max-icont-min-icon

மாதவி ராஜே சிந்தியாவின் இறுதிச்சடங்குகள் குவாலியரில் நடைபெற உள்ளன.

புதுடெல்லி,

மத்திய விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா. இவரது தாயார் மாதவி ராஜே சிந்தியா கடந்த 3 மாதங்களாக செப்சிஸ் நோயுடன் கூடிய நிமோனியாவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வந்த மாதவி ராஜே சிந்தியா சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.28 மணியளவில் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெற உள்ளன. நேபாள அரச குடும்பத்தைச் சேர்ந்த மாதவி ராஜே, மூத்த காங்கிரஸ் தலைவர் மாதவ்ராவ் சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார்.

மத்திய மந்திரி ஜோதிராதித்யா சிந்தியாவின் தாயார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாதவி ராஜே சிந்தியா பல்வேறு தொண்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story