கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது


கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 5 Oct 2023 6:45 PM GMT (Updated: 5 Oct 2023 6:45 PM GMT)

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. தமிழகத்துக்கு வினாடிக்கு 2,489 கனஅடி தண்ணீர் செல்கிறது.

மைசூரு:

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாக குடகு மாவட்டம் உள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை காலத்தில் கே.ஆர்.எஸ். அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழியும். தமிழகத்துக்கும் உபரி நீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை ெபாய்த்து போனதால் கே.ஆர்.எஸ். அணை நிரம்பவில்லை.

124.80 அடி ெகாள்ளளவு ெகாண்ட கே.ஆர்.எஸ். அணையில் கடந்த ஆகஸ்டு மாதம் 117 அடி தண்ணீர் இருந்தது. அதன்பிறகு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்பேரில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்தது.

இந்த நிலையில் கே.ஆர்.எஸ். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகில் கடந்த சில தினங்களாக கனமழை ெபய்ததால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த 4 நாட்களாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை தாண்டியது. இந்த நிலையில் தற்போது நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் தீவிரம் குறைந்ததால், அணைக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கி உள்ளது.

கடந்த 3-ந்தேதி வினாடிக்கு 11,800 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று முன்தினம் அது வினாடிக்கு 9,052 கனஅடி ஆக குறைந்தது. நேற்று மேலும் குறைந்து நீர்வரத்து வினாடிக்கு 5,861 கனஅடியாக உள்ளது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 100.82 அடி தண்ணீர் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,489 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மற்றொரு முக்கிய அணையான கபினி, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை ெவளுத்து வாங்கியது. இதனால், கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்தது. தற்போது வயநாட்டிலும் மழை குறைந்துள்ளதால், கபினி அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 3,349 கனஅடி தண்ணீர் வந்த நிலையில், நேற்று காலை வினாடிக்கு 2,800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,280 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்றைய நிலவரப்படி 2,276 அடி தண்ணீர் இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 2,489 கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 2,482 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story