கன்னட நடிகர் கந்தாசி நாகராஜ் திடீர் மரணம்
கன்னட நடிகர் கந்தாசி நாகராஜ் திடீர் மரணம் அடைந்தார்.
பெங்களூரு:
கன்னட திரை உலகில் நடிகராக இருந்தவர் காந்தாசி நாகராஜ். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார். மேலும் கடந்த 40 ஆண்டுகளாக காந்தாசி நாகராஜ், நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளார். நடிகர் ஜக்கேஷ் எம்.பி.யின் தீவிர ஆதரவாளரான காந்தாசி நாகராஜ், ஜக்கேசுக்கு பெரும்பாலான ஆடைகளை வடிவமைத்து கொடுத்தவர் ஆவார்.
இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் காந்தாசி நாகராஜ் அவதிப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து போனதாக தெரிகிறது. இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காந்தாசி நாகராஜ் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 65. காந்தாசி நாகராஜ் மறைவுக்கு கன்னட திரை உலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story