கர்நாடகா: கால்களை இழந்தபோதும் மனம் தளராமல் உழைக்கும் நபர்; குவியும் பாராட்டுகள்


கர்நாடகா: கால்களை இழந்தபோதும் மனம் தளராமல் உழைக்கும் நபர்; குவியும் பாராட்டுகள்
x

கர்நாடகாவில் கால்களை இழந்தபோதும் மனம் தளராமல் இரவும், பகலும் பணி செய்து பொருள் ஈட்டும் நபருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


பெங்களூரு,


கர்நாடகாவின் பைக்கம்பதியில் வசித்து வருபவர் பரசுராம். சிறுவயதிலேயே அவர் இரண்டு கால்களையும் இழந்து விட்டார். இதனால், தனது வேலைகளை அவர் கைகளை கொண்டு செய்ய பழகி கொண்டார்.

9-ம் வகுப்பு வரை படித்த அவரால் மேற்கொண்டு படிக்க வசதியில்லை. வறுமையில் உள்ள தனது குடும்பத்தின் நிலையை உயர்த்த விரும்பி உள்ளார். தொடக்கத்தில், தனது குடும்பத்திற்கு தேவையான பணத்திற்காக சிலரிடம் உதவி கேட்டு வந்து உள்ளார். அதன்பின்னர், அதனை விடுத்து வீடு ஒன்றில் பாதுகாவலராக பணியில் சேர்ந்து உள்ளார்.

அவருக்கு அரசு சார்பில் மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. இதன்பின், இரவில் பாதுகாவலர் வேலையிலும், பகலில் உணவு வினியோகிக்கும் ஏஜெண்டாகவும் அவர் செயல்பட்டு வருகிறார்.

இதுபற்றி பரசுராம் கூறும்போது, பலரும் எனக்கு ஆதரவு தந்தனர். உற்சாகம் ஊட்டினர். வாடிக்கையாளர்களும் எனக்கு ஆதரவாக உள்ளனர். அவர்கள் தாராள மனதுடன் கொடுக்கும் டிப்ஸ் பணமும் தொடர்ந்து என் வாழ்க்கையை நடத்தி செல்ல உதவுகிறது என கூறியுள்ளார்.

அவரது மனதைரியம் மற்றும் வலிமை ஆகியவற்றை கண்டு உடனிருப்போர் மட்டுமின்றி சமூக ஊடகவாசிகளும் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.


Next Story