கர்நாடக சட்டசபை தேர்தல்; அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: தேர்தல் அறிக்கை வெளியீடு


கர்நாடக சட்டசபை தேர்தல்; அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி:  தேர்தல் அறிக்கை வெளியீடு
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் ஆம் ஆத்மி, சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர், காங்கிரஸ் தலைவரின் உறவினர் என பல முக்கிய நபர்களை களமிறக்க திட்டமிட்டு உள்ளது.

சென்னை

புதுடெல்லி,

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று முறைப்படி அறிவித்தது. இதன்படி, வருகிற மே 10-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தல் ஒரே கட்டத்தில் நடத்தி முடிக்கப்படும். வாக்கு எண்ணிக்கை மே 13-ந்தேதி நடத்தி முடிக்கப்படும். தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க., ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வியூகம் வகுத்து வருகிறது. காங்கிரஸ், மதசார்பற்ற தளம் ஆகிய கட்சிகளும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளன. இந்த சூழலில், ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் பங்கேற்க முடிவு செய்து உள்ளது.

இதனை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் உறுதி செய்து உள்ளார். இதன்படி, 80 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அக்கட்சி கடந்த வாரம் வெளியிட்டது. அதில், சுப்ரீம் கோர்ட்டு வழக்கறிஞர் பிரிஜேஸ் கலப்பா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமாரின் உறவினரான சரத்சந்திரா ஆகியோரையும் ஆம் ஆத்மி களத்தில் இறக்கி அரசியல் கட்சிகளை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ஆம் ஆத்மியின் திட்டத்தின்படி, இளைஞர்கள், மகளிர், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் வேட்பாளர்களாக உள்ளனர். 13 வழக்கறிஞர்கள், 3 டாக்டர்கள் மற்றும் 4 தகவல் தொழில் நுட்ப பணியாளர்களை களமிறக்கி உள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கையையும் அக்கட்சி மூத்த தலைவர்கள் இன்று வெளியிட்டனர்.


Next Story