மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு


மே 10ம் தேதி கர்நாடக சட்டமன்ற தேர்தல் - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 March 2023 12:14 PM IST (Updated: 29 March 2023 12:26 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

பெங்களூரு,

224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, நடப்பு கர்நாடக அரசின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் மே 10ம் தேதி நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 244 தொகுதிக்கும் மே 10ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.

வேட்புமனு பரீசிலனை ஏப்ரல் 21-ம் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற ஏப்ரல் 24-ம் தேதி அறிவிக்கப்பட்டுள்லது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 13-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


Next Story