கர்நாடகா: ரெயில் நிலையத்தில் டிரம்முக்குள் கிடந்த 30 வயது பெண்ணின் உடல்; 2 மாதத்தில் 2-வது சம்பவம்
கர்நாடகாவில் உள்ள ரெயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் 30 வயது பெண்ணின் உடல் ஒன்று திணித்து வைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெந்தலூரு மாவட்டத்தில் பைய்யப்பனஹள்ளி நகரில் உள்ள சர் எம். விஸ்வேஸ்வரய்யா ரெயில் நிலையத்தில் 31 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒன்று கிடந்து உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தில் பயணிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது.
ஆட்டோவில் வந்த 3 பேர் பெண்ணின் உடலை ரெயில் நிலையத்திற்குள் கொண்டு வந்து போட்டு விட்டு சென்று உள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் சூப்பிரெண்டு சவும்யலதா தலைமையிலான போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 பேர் டிரம்மை தூக்கி கொண்டு வந்து ரெயில் நிலையத்தில் விட்டு போனது பற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கடந்த ஜனவரியில் பெங்களூரு நகரில் யஷ்வந்த்பூர் ரெயில் நிலையத்தில் 31 முதல் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் ஒன்று இதேபோன்று கண்டெடுக்கப்பட்டது அப்போது பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் 2 மாதத்தில் அதேபோன்று 2-வது சம்பவம் நடந்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.