கர்நாடக தேர்தல் - புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல்
கர்நாடக தேர்தலையொட்டி புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மே மாதம் 10-ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவடைந்தது.
இந்த நிலையில், புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அன்பரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளர் அன்பரசன், கர்நாடக மாநிலச் செயலாளர் எஸ் டி குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்று தேர்தல் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வாழும் புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அ.தி.மு.க. அவைத்தலைவர் டி.அன்பரசன் போட்டியிடுவார் என்று நேற்று அதிமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story