கர்நாடக தேர்தல்: ஓபிஎஸ் மனு ஏற்பு - தேர்தல் அலுவலகத்தில் அதிமுக சார்பில் புகார் மனு
ஓபிஎஸ் தரப்பு சட்டவிரோதமாக அதிமுகவின் 'பி' பார்மை பயன்படுத்தி உள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் வருகிற மே மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் காந்திநகர் தொகுதியில், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த வேட்பு மனுவை அதிமுக பெயரில் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக அதிமுக மாநில செயலாளர் குமார் தலைமையிலான ஈபிஎஸ் தரப்பு காந்திநகர் தேர்தல் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தாக்கல் செய்த மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் இரட்டை இலை சின்னத்தை தங்களை தவிர வேறு எந்த தரப்புக்கும் ஒதுக்கக்கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். ஓபிஎஸ் தரப்பு சட்டவிரோதமாக அதிமுகவின் 'பி' பார்மை பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story