கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா


கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தினசரி பாதிப்பு 300-ஐ நெருங்கியுள்ளது. இதனால் சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்தில் கொரோனாவின் 3 அலைகளிலும் நான் அதில் சிக்காமல் தப்பித்தேன். இந்த முறை அதில் மாட்டி கொண்டேன். லேசான காய்ச்சல் இருந்ததால் பரிசோதனை செய்தேன். இதில் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நான் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.


Next Story