கர்நாடகா - மராட்டிய மாநில எல்லை பிரச்சினை: லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த லாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவி மாவட்டம் தங்களுக்கு சொந்தமானது என மகாராஷ்டிரா மாநிலம் உரிமை கோரி வருகிறது. இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக மாநில எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி நகருக்கு வருகை தரவிருந்த மகாராஷ்டிரா அமைச்சர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த லாரிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story