கர்நாடகா: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு - ஏடிஜிபி அம்ரித் பால் கைது..!


கர்நாடகா: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கு - ஏடிஜிபி அம்ரித் பால் கைது..!
x

கர்நாடகாவில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கை சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 545 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கலபுரகியை சேர்ந்த பா.ஜனதா பெண் பிரமுகர் திவ்யா, அப்சல்புரா பிளாக் காங்கிரஸ் தலைவர் மகாந்தேஷ், அவரது சகோதரர் ருத்ரேகவுடா பாட்டீல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

இந்த நிலையில், கர்நாடகாவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கு நடந்த தேர்வில் முறைகேடு தொடர்பாக ஏடிஜிபி அம்ரித் பாலை சி.ஐ.டி. போலீசார் கைது இன்று செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட ஏடிஜிபி-யிடம் சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் பணியில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

1 More update

Next Story