விசா முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு

விசா முறைகேடு வழக்கு - கார்த்தி சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x

விசா முறைகேடு வழக்கு வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

புதுடெல்லி,

விசா முறைகேடு வழக்கு வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு விசாரணையை ஜூன் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2011-இல் ப. சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, 263 சீனர்களுக்கு கார்த்தி சிதம்பரம் முறைகேடாக விசா பெற்றுத் தந்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு deல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் துவங்கிய நீதிபதியிடம் கார்த்தி சிதம்பரத்தின் வழக்கறிஞர், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் கரோனா காரணமாக வாதாட ஆஜராக முடியாததால் மனு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து, ஜாமீன் மீதான விசாரணையை வருகிற ஜுன் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story