பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் - சீதாராம் யெச்சூரி கருத்து


பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் - சீதாராம் யெச்சூரி கருத்து
x

கோப்புப்படம்

அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமென்றால் பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.

ஐதராபாத்,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

ஐதராபாத் சமஸ்தான விடுதலைக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர்கள் வரலாற்றை திரிக்க பார்க்கிறார்கள். தெலுங்கானாவில் ஆட்சியை பிடிக்க வகுப்புவாதத்தை ஊக்குவிக்கிறார்கள்.

அரசியல் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமானால், உரிமைகள் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டுமானால், விசாரணை அமைப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுக்க வேண்டுமானால், பா.ஜனதாவை அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

1 More update

Next Story