கபில் சிபலின் புதிய அமைப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு


கபில் சிபலின் புதிய அமைப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு
x

கபில் சிபலின் புதிய அமைப்புக்கு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய மந்திரி கபில் சிபல், மாநிலங்களவை சுயேச்சை எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். அவர் நாட்டில் நிலவும் அநீதிகளுக்கு எதிராக 'இன்சாப் கே சிபாஹி' என்ற புதிய அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

தனது அமைப்புக்கு ஆதரவு அளிக்குமாறு முதல்-மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில், டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அந்த அமைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

''கபில் சிபல் நல்ல முயற்சியை தொடங்கி இருக்கிறார். வக்கீல்கள், பொதுமக்கள் உள்பட அனைவரும் அதில் சேர வேண்டும். நாம் ஒன்றாக அநீதியை எதிர்த்து போராடுவோம்'' என்று அவர் கூறியுள்ளார்.


Next Story