7 மணி நேரம் தொடர் தியானத்தில் கெஜ்ரிவால் - நாட்டு நலனுக்காக பிரார்த்தனை செய்வதாக அறிவிப்பு
ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மக்களுக்கு நல்ல கல்வியும் நல்ல சுகாதார வசதிகளும் கிடைக்க நினைத்தவர்களை சிறையில் அடைக்கும் பிரதமர், நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு ஆதரவு அளிப்பது மிகவும் கவலை அளிக்கிறது என்று தெரிவித்திருந்தார்.
இதனால் நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், ஹோலி பண்டிகையன்று நாட்டின் நலனுக்காக நாள் முழுவதும் பிரார்த்தனை செய்ய உள்ளதாகவும் கெஜ்ரிவால் அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு தியானத்தை தொடங்கிய கெஜ்ரிவால் மாலை 5 மணி வரை 7 மணி நேரம் தொடர் தியானத்தில் ஈடுபட்டுள்ளார்.
Related Tags :
Next Story