சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்


சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்
x

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

சிறுவாணி அணையின் நீர் சேமிப்பை அணையின் முழு கொள்ளவுக்கு உயர்த்தி பராமரிக்க வேண்டும் என்றும் விநியோகிக்கப்படும் அளவை உயர்த்த வேண்டும் என்றும் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 103 எம்எல்டி ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஜூன் 20 முதல் சிறுவாணி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகபட்ச சாத்திய அளவான 103 எம்எல்டி ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விவாதிக்க, கூடிய விரைவில் நிலை கூட்டத்தை கோருகிறேன்' என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்து தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'ஒத்துழைப்பு மற்றும் தோழமை உணர்வுடன் பிரச்சினைகளை விவாதித்து தீர்வு காண எதிர்ப்பார்க்கிறோம். இரு மாநிலங்களும் இணைந்து வளர்ச்சியடைவதை நாம் உறுதி செய்வோம்' என்று கூறியுள்ளார்.


Next Story