பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் மரணம்.. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு


பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இன்ஸ்பெக்டர் மரணம்.. தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு
x
தினத்தந்தி 17 April 2024 5:07 PM IST (Updated: 17 April 2024 5:58 PM IST)
t-max-icont-min-icon

பெண் டாக்டர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சைஜு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சைஜு. இவர் மீது பெண் டாக்டர் ஒருவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சைஜு தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்திருந்தார்.

மேலும் சைஜு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பெண் டாக்டர் தனது புகாரில் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து, காவல்துறை பணியில் இருந்து சைஜு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சைஜு தாக்கல் செய்த மனுவை கேரள ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், எர்ணாகுளம் மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பேத்கர் ஸ்டேடியம் அருகே தூக்கில் தொங்கிய நிலையில் சைஜுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story