கேரளா: மிளகாய் பொடி தூவி மூதாட்டி பலாத்காரம்; 29 வயது வாலிபர் கைது
கேரளாவில் கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த நபர், மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, 7 பவுன் தங்க நகையை திருடி சென்றார்.
ஆலப்புழை,
கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்தில் காயங்குளம் பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். இதனை கனகாகுன்னு பகுதியை சேர்ந்த தனேஷ் (வயது 29) என்ற வாலிபர் நோட்டமிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவில், மூதாட்டியின் வீட்டுக்கு சென்ற தனேஷ், அவர் மீது மிளகாய் பொடி தூவி தாக்கியிருக்கிறார். கொள்ளையடிக்கும் நோக்கில் வந்த நபர், அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். பின்பு, 7 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு, வீட்டின் வெளிப்புறம் கதவை பூட்டி விட்டு தப்பியோடி விட்டார்.
அவர் தப்பி செல்லும்போது, அந்த மூதாட்டியின் மொபைல் போனையும் எடுத்து சென்று விட்டார். இதனால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களை அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை நேற்று காலை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் பார்த்து போலீசாரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனிடையே, 7 பவுன் தங்க நகையை கடையில் விற்க முயன்றபோது, போலீசார் தனேஷை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.