ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் சுவப்னா சுரேஷ் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்; சுயசரிதையில் வெளியானதால் பரபரப்பு..!


ஐ.ஏ.எஸ் அதிகாரியுடன் சுவப்னா சுரேஷ் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள்; சுயசரிதையில் வெளியானதால் பரபரப்பு..!
x

கேரளா தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேசின் சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியிடப்பட்டது.

பெரும்பாவூர்,

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவப்னா சுரேஷ் எழுதி வெளியிட்ட, அவரது சுயசரிதையான சதியுடே பத்ம வியூகம் என்ற புத்தகத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சுயசரிதையில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் குடும்பத்தினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டு உள்ளார். திருவனந்தபுரம் நகரில் இயங்கி வரும் ஐக்கிய அரபு தூதரகத்தின் அலுவலர் என்ற முறையில் கடந்த 2016-ம் ஆண்டு தான் சிவசங்கரனை சந்தித்தேன். அதுமுதல் ஓராண்டு காலம் அவர், தன்னுடன் நெருங்கிய உறவு கொண்டிருந்தார்.

சிவசங்கரனுக்கு சுவப்னா சுரேஷ் மீது அளவற்ற காதல் இருந்துள்ளது. தனது கடைக்கண் பார்வைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய சிவசங்கரன் தயாராக இருந்தார். தங்க கடத்தல் வழக்கில் தான் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளிடம் சிக்குவதற்கு முன்பு வரை சிவசங்கரனின் துணையாகவே வாழ்ந்தேன்.

பெங்களூருவில் தலைமறைவாக இருந்தபோது, தன்னை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்த பின் காட்சிகள் மாற தொடங்கியது. மேலும் அவர் வெளியிட்ட புத்தகத்தில் ஏராளமான புகைப்படங்கள், சுவப்னா சுரேஷ் சிவசங்கரனுடன் கேக் ஊட்டி மகிழ்வது போன்ற நெருக்கமாக இருந்து உள்ளதை காட்டுகிறது.

இந்த புத்தகம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story