எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் வழக்கு: பெண்ணின் சம்மதத்துடன் நடந்ததா என விசாரிக்க வேண்டும் கேரள ஐகோர்ட்டு உத்தரவு


எம்.எல்.ஏ.வுக்கு எதிரான பாலியல் வழக்கு: பெண்ணின் சம்மதத்துடன் நடந்ததா என விசாரிக்க வேண்டும் கேரள ஐகோர்ட்டு உத்தரவு
x

எத்தனை முறை சம்மதத்துடன் பாலியல் தொடர்பில் இருந்தாலும், ஒருமுறை மறுக்கப்பட்டாலும் அது பாலியல் பலாத்காரமாகிவிடும் என்று அரசு வக்கீல் சுட்டி காட்டினார்.

திருவனந்தபுரம், நவ.15-

பெரும்பாவூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. எல்தோசுக்கு எதிராக, திருவனந்தபுரம் கோவளத்தை சேர்ந்த ஆசிரியை கொடுத்த பாலியல் புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ. எல்தோசுக்கு திருவனந்தபுரம் மாஜிஸ்திரேட்டு கோாட்டு முன்ஜாமீன் வழங்கியது. இதை எதிர்த்து ஜாமீனை ரத்து செய்யக்கோரி அரசு தரப்பில் கேரள ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, நீதிபதி, மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்ய முடியாது என்றார். மேலும், எத்தனை முறை சம்மதத்துடன் பாலியல் தொடர்பில் இருந்தாலும், ஒருமுறை மறுக்கப்பட்டாலும் அது பாலியல் பலாத்காரமாகிவிடும் என்று அரசு வக்கீல் சுட்டி காட்டினார். அதேநேரத்தில் விசாரணைக்கு எம்.எல்.ஏ. முழு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. எனவே, எதிர்தரப்பு வாதங்களை கேட்ட பின் ஜாமீன் விவகாரத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறி வழக்கு விசாரணையினை ஐகோர்ட்டு ஒத்தி வைத்தது.


Next Story