கேரளா: குரான் ஒப்புவித்தலில் முதல் பரிசு பெற்ற இந்து மாணவிக்கு குவிந்த பாராட்டுகள்


கேரளா:  குரான் ஒப்புவித்தலில் முதல் பரிசு பெற்ற இந்து மாணவிக்கு குவிந்த பாராட்டுகள்
x

கேரளாவில் குரான் ஒப்புவித்தலில் முதல் பரிசு பெற்ற இந்து மாணவிக்கு பாராட்டுகள் குவிகின்றன.கோழிக்கோடு,


கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் தொட்டானூர் துணை மாவட்ட அளவிலான கலை திருவிழா நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில், செம்மரத்தூர் எல்.பி. பள்ளியை சேர்ந்த பார்வதி என்ற 4-ம் வகுப்பு மாணவி குரான் ஒப்புவித்தல் போட்டியில் கலந்து கொண்டார்.

இதில், மேடையின் அனைவர் முன்னிலையிலும், பார்வதி குரானை ஒப்புவித்து ஏ கிரேடு உடன் முதல் பரிசை வென்றார். இந்து மாணவியான அவர் அரபி மொழியில் அடுக்கடுக்காக பேசியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இவரது இரட்டை சகோதரியான பர்வானாவும் அரபி மொழியில் சிறந்து விளங்குகிறார். அவர்கள் இருவரும் பள்ளி ஆசிரியை ருகாயாவிடம் இருந்து அரபியை கற்றுள்ளனர். பார்வதியின் தந்தை நலீஷ் பாபி.

கோழிக்கோட்டில் ஐ.டி. ஊழியராக பணியாற்றி வருகிறார். தாயார் டினா பிரபா ஆங்கில பேராசிரியை. ஒரு புது மொழியை கற்பது முக்கியம். அது அவர்களை ஊக்குவிக்கும் என்று பார்வதியின் பெற்றோர் நினைத்துள்ளனர். மொழிக்கு மதம் என்பது கிடையாது என்று பார்வதி நிரூபித்து விட்டாள் என அவரது பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். பார்வதிக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Next Story