கேரள மாநிலத்தில் முதியோருக்கும், கர்ப்பிணிகளுக்கும் முககவசம் கட்டாயம்


கேரள மாநிலத்தில் முதியோருக்கும், கர்ப்பிணிகளுக்கும் முககவசம் கட்டாயம்
x

கோப்புப்படம்

கேரள மாநிலத்தில் முதியோருக்கும், கர்ப்பிணிகளுக்கும் முககவசம் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே அதிகபட்ச அளவில் ஒவ்வொரு நாளும் கேரளாவில்தான் கூடுதல் பாதிப்பு பதிவாகி வருகிறது. அங்கு குறிப்பாக எர்ணாகுளம், திருவனந்தபுரம், கோட்டயம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகளவில் உள்ளது.

இந்த நிலையில், அங்கு முதியோருக்கும், கர்ப்பிணிகளுக்கும் முககவசம் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அரசு உத்தரவில், நீரிழிவு போன்ற நோய் உடையவர்களும், குழந்தைகளும் பொது இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கொரோனா நிலைமை குறித்து சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், " கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது ஆஸ்பத்திரி சேர்க்கை சிறிதளவில் அதிகரித்துள்ளது. ஆனால் 0.8 சதவீதத்தினருக்கு மட்டுமே ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. 1.2 சதவீதத்தினர் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் சிகிச்சை பெறுகின்றனர்" என தெரிவித்தார்.

1 More update

Next Story