கேரள மந்திரி சஜி செரியன் திடீர் ராஜினாமா
கேரள அமைச்சரவையில் இருந்து மந்திரி சஜி செரியன் ராஜினாமா செய்தார்.
திருவனந்தபுரம்,
அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கேரள மந்திரி சஜி செரியன் பதவி விலகினார்.
மீன்வளத்துறை மந்திரியாக இருந்த சஜி செரியன் பேச்சை கண்டித்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று இன்று காலை வரை கூறிவந்த நிலையில் சஜி செரியன் மாலையில் ராஜினாமா செய்துள்ளது கேரள அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசியல் சாசனம் சாமானியர்களை சூறையாட பயன்படுத்தப்படுகிறது எனப்பேசி சர்ச்சையில் சிக்கிய கேரள மாநில கலாச்சாரத்துறை மந்திரி சஜி செரியன் ராஜினாமா செய்துள்ளார். கட்சித் தலைமை அறிவுறுத்தலை அடுத்து மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பு பற்றி ஒருபோதும் நான் அவதூறாக பேசியது இல்லை எனவும் மந்திரி பதவியை ராஜினாமா செய்தது தனிப்பட்ட முடிவு என சாஜி செரியன் விளக்கம் அளித்துள்ளார்.